காதலின்றி அமையாது உலகு
என்பதாய் காதல்
கட்டாயமாக்கப்பட்டுவிட்டது
நம் கலாச்சாரத்தில்!
கஞ்சிக்கு வழியில்லாதவன் கூட
காதலிக்க தோழியின்றி இல்லை.
நாமும் ஊருடன் ஒத்து
போவதுதான் சரி எனப்பட்டது.
அதுவாய் அமைய வேண்டும்
இது நண்பர்கள்!
அலைந்து திரிய வேண்டும்
இது அனுபவஸ்தர்கள்!
எத்தனை முயன்றும்
எதுவும் சிக்கவில்லை
ச்சே,என்ன அரசாங்கம்?
இதை கூட இலவச திட்டத்தில்
சேர்க்கவில்லை எனக் கோபம் வந்தது!
காசுக்காவது கிடைக்கிறதா
எனத் தேடிப்பார்த்தேன்,
ஏராளம் கிடைத்தது ஆனால்
அனைத்தும் போலிகள்.
அவள் அப்படி ஒன்றும்
அழகில்லை என்றாலும்
அக்மார்க் காதல்தான் வேண்டுமென
பிடிவாதமாய் இருந்தேன்
உலகம் தெரியாதவனாய்!
அலுத்து சலித்த வேளையில்
அழகி ஒருத்தி வந்தாள்!
(சரி..சரி..எனக்கு மட்டும் அழகி)
காதல் கரை புரண்டது,
வானம் தலை தட்டியது
மின்னல் முத்தமிட்டது
கனல் குளிர்ந்தது,மணல் இணித்தது!
கண்மூடித்தனமாய் காதலித்து பின்,
கண் திறந்தபோது, அவள் அங்கில்லை.
திக்குமுக்காடி,தடுமாறி,திசைமா றி
தாடி வளர்த்து, தண்ணியடித்து,
தன்னைத்தானே நொந்தபின் புரிந்தது,
காதலும் கற்று மற!!
