Thursday, November 13, 2008

போர்நிறுத்தம் தேவை : நடேசன்

போர்நிறுத்தம் தேவை என்ற எமது நிலையில் மாற்றமில்லை - அரசே அதனை ஒருதலைப்பட்சமாக முறித்தது: நடேசன்[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 08:47.33 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் தேவை என்ற நிலையிலேயே எப்போதும் உள்ளார்கள். எங்களது அந்த நிலையை மீண்டும் வலியுறுத்துவதில் எமக்குத் தயக்கம் எதுவும் இல்லை; எப்போதும் இருந்ததில்லை. அதனைத் தெரிவிக்க ஒருபோதும் பின்னின்றதுமில்லை.இலங்கை அரசாங்கமே போர்நிறுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்டது.
கொழும்பு அரசாங்கம் ஆக்கிரமிப்புப் போர் ஒன்றைத் தமிழ் மக்கள் மீது திணித்ததாலேயே புலிகள் தற்காப்புப் போரில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். போர் நிறுத்தம் குறித்த விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன என்று தமிழகத் தலைவர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் மேற்கண்டவாறு நேற்றுத் தெளிவுபடுத்தினார்
போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் உறுதியுடன் உள்ளார்கள். அதனை நாம் திரும்பத் திரும்ப கூறி வந்திருக்கிறோம் எனவும் நடேசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் டி.பாண்டியன்; விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைகள் போர் நிறுத்தம் குறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பகிரங்க அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ்வின்

No comments:

Post a Comment

உலகப் பொதுமறை

Followers