தொடர்ந்து விகடனில் ஒ! பக்கங்களில் மிகவும் ஆரிய நிலைப்பாட்டோடு எழுதிவருகிறார் ஆரிய ஞானி….தன்னை நாத்திகன் என்றும்,பெண்ணுரிமை போராளி என்றெல்லாம் அழைத்துக் கொண்டு தற்பெருமை பாடும் ஆரிய ஞானியின் எழுத்துகளில் போர்வைக்குள் உள்ள பூனையாய் தெரிந்து விடுகிறது ஆரிய மனம்.ஒரு கரத்தால் தி.மு.க வை சுண்ணாம்புக் காலவாய் வார்த்தைகளால் வறுத்தெடுத்து விட்டு மற்றொரு கரத்தால் பூணூல் பாசத்தால் ஜெயலலிதாவை செல்லத்திட்டு திட்டுகிறார் ஆரிய ஞானி.(சமமாய் விமர்சிக்கிறாராம்)இரண்டு வாரத்திற்கு முன் விகடனில் அறிஞர் அண்ணாவிற்கு விழா எடுப்பது குறித்து ஆடு நனைகிறதே என்று இந்த ஓநாய் அழுதது. அக் கட்டுரையில் தந்தை பெரியாரை காட்டிலும் அண்ணா உயர்ந்தவர் என்று சிண்டு முடிய முயன்றார் ஆரிய ஞானி. ஆரிய மாயை எழுதிய தந்தை பெரியாரின் போர்வாள் அண்ணாவை உயர்த்துவது இவர் நோக்கமல்ல. அண்ணாவை உயர்த்துவது போல் நடித்து தந்தை பெரியாரை இழிவு படுத்த முயற்சிக்கிறது இந்த ஆரிய ஞானி.விகடன் - தந்தை பெரியார் திரைப்படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்ட போது, அது தந்தை பெரியார் குறித்த படைப்பு என்பதால் மதிப்பெண் என்ற அளவுகோலால் அப்படத்தை அளக்க இயலாது என்றும் அது தந்தை பெரியார் பெருமைக்கு தகுந்ததல்ல என்றும் விமர்சித்து தனது பாரபட்சமற்ற நிலையை எடுத்துக் காட்டியது. ஆனால், இந்த ஆரிய ஞானி அதே விகடனில் தந்தை பெரியாரைப் பற்றியும், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார விடுதலைக்குப் பாடுபட்ட திராவிட இயக்கங்கள் குறித்தும் தவறான கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருகிறார். கலைஞர் மு. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் இவர் விமர்சிப்பது குறித்து நமக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில் சட்டமன்றத்தில் தன்னை ஆரிய இனத்தின் குலக் கொழுந்து என்று பெருமை கொப்பளிக்க அழைத்துக்கொண்ட ஜெயலலிதா குறித்து இவர் எழுப்பிய விமர்சனங்கள் கலைஞர் மு. கருணாநிதி குறித்து எழுப்பிய விமர்சனங்களைவிட எத்தகைய ஆரிய பாசத்தன்மை மிகுந்தது என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.ஒரு ஜனரஞ்சக பத்திரிகையில் பாரபட்சமில்லாமல் விமர்சனம் எழுதுவதாக பீற்றிக் கொள்ளும் இந்த ஆரிய ஞானி ஏன் இதுவரை தந்தை பெரியார் முன் வைத்த ஆரிய சூழ்ச்சியின் வேரையே அம்பலப் படுத்திய, சமூக, பொருளாதார கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை?சோ. ராமசாமிக்கும் இவருக்கும் பெருத்த வேறுபாடுகள் இல்லை. அவர், நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வெளிப்படையாக இந்துத்துவாவிற்கு ஆதரவாகவும், மனு தர்மத்திற்கு ஆதரவாகவும் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால், இவரோ பசுத்தோல் போர்த்திய நரியாக நாத்திகன் என்றும், முற்போக்கு சிந்தனைகளுக்கு ஆதரவாளர் என்றும், பெண்ணியம் போற்றும் போராளி என்றும் நடித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப் போனால் சோ. ராமசாமி இவரை விட பன்மடங்கு சிறப்பானவர். தந்தை பெரியாரின் தலைமுறைகளுக்கு நான்தான் உங்களது எதிரி என்று வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறார். ஆனால், ஆரிய ஞானியோ முதுகுக்குப் பின்னால் நின்றுகொண்டு நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் பொய்யான தகவல்களுடன் நம்மை சொறிந்துகொண்டிருக்கிறார். திருவாளர் ஆரிய ஞானி அவர்களே.. சிண்டு முடிவது உங்கள் குல வழக்கம். அதை நீங்கள் மறக்காமல், மாற்றாமல் செய்து வருவதற்கு எங்களது பாராட்டுகள். ஆனால், உங்களது வேலைகள் எங்களுக்கு நன்றாகத் தெரியும், உங்கள் உள் நோக்கம் என்ன, ஆதி மூலம் என்ன, என்பது எங்களுக்கு நன்றாகப் புரியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். குஷ்புக்காக குரல் கொடுத்துக் குடை பிடிப்பதோடு நின்றுகொள்ளுங்கள். அறிஞர் அண்ணாவைப் பற்றியும் தந்தை பெரியாரைப் பற்றியும் உளராமல் வாயை மூடிக் கொள்ளுங்கள்
நன்றி;வெண்ணிற் இரவுகள் வலைப்பூ

No comments:
Post a Comment